
நோக்கம்:
சத்யாஷாட ஸூத்ரம் உள்ள ஆஸ்திகர்களுக்கு கர்மா ப்ரயோகம் செய்ய உதவுவது
ப்ரயோக விதிகளை எளிதில் புரியும்படி கொடுப்பது
சனாதன தர்மத்தை பரப்புவது
புதியது: ஸ்ரீ ஸ்ரீ பெரியவாள் அனுக்ரஹத்துடன் (See bottom of this page) க்ரந்த லிபியில் ஸ்ரீ ஹிரண்யகேசி ஸ்ரீ சத்யாஷாட க்ருஹ்ய ஸூத்ரம், க்ருஹ்ய காரிகை, ச்ராத்த ப்ரயோகம் – see library section
வியாச மஹரிஷி வேதங்களை நான்காக பிரித்து நமக்கு அருளினார். அவைகளில் கூறப்பட்ட 40 ஸம்ஸ்காரங்களுக்கு 9 ருஷிகள் அவற்றை அனுசரிக்கும் (க்ருஹ்ய சூத்ரங்கள் சௌர சூத்ரங்கள்) முறைகளை அருளினர். அவற்றில் சத்யாஷாடர் ஒருவர். இம்முறையை பின்பற்றும் ஆஸ்த்திகர்கள் நடுக்காவேரி (திருவையாறு அருகில்) க்ராமத்திலும் மற்றும் மயிலாடுதுறையை சுற்றி சில க்ராமங்களிலும் வசிக்கின்றனர். அவர்களின் வாரிசுகள் பல்வேறு நகரங்களில் தற்சமயம் உள்ளனர்.
அவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டு ப்ரும்ம ஸ்ரீ அ. வை. ராமநாதஅய்யர் அவர்கள் 1980 முதல் 1990 வரை உள்ள காலத்தில் இரண்டு புத்தகங்களை ஸ்ரீசத்யாஷட சூத்ர அனுஷ்டான ஸபாவை முன்னிட்டு வெளியிட்டார்கள். ப்ரும்மஸ்ரீ கு. ஸ்ரீனிவாச ஸாஸ்த்ரிகள் (நடுக்காவேரி) 1900ல் தொகுத்தளித்த ஸூத்ர ப்ரயோகம், காரிகை இவை இப் புத்தகம் வெளியிட உதவியளித்தன என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஸ்வசூத்ரப்படியே கர்மாக்கள் செய்ய வேண்டும் என்ற பெரியோர்களின் அறிவுரையை மேற்கொண்டு, மீண்டும் அச்சடிக்க முயலும் நேரத்தில் அதை மின் புத்தகமாக வெளியிட்டால் அவற்றை பாதுகாப்பதும், எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வதும் எளிதாகிவிடும் என்றதால் இம்முயற்சி.
நடுக்காவேரியில் சத்யாஷாட மஹருஷியின் சிலாவும், விக்ரஹமும் உள்ளன. மேலும் ஆவணி அவிட்டத்தன்று விக்ரஹம் வீதி உலா வருவதும் இன்றும் நடைபெறுகிறது.
இம்முயற்சியை ஆரம்பித்து 10 வருடங்களுக்கும் மேல் தாமதமாகி வந்தது. எனினும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் தரிசனமும், ஆசீர்வாதங்களும் 2018 மார்ச் மாதம் எனக்கு கிடைத்தது, உடனே முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மேலும் எனது மாமா மயிலாடுதுறை ப்ரும்மஸ்ரீ அ. வை. ராமநாத அய்யர் அவர்கள், எப்பொழுதும் என்னை வழி நடத்தும் எனது தந்தை நடுக்காவேரி ஸ்ரீ ராமசந்திர அய்யர் (ஜி.ஆர்) அவர்கள் ஆசிகளும் இம்முயற்சி வெற்றிபெறவும் மேலும் விரிவாக்கம் அடையவும் செய்யட்டும்.
இம்முயற்சியில் சமஸ்க்ருதம், க்ரந்தம், தமிழ், ஆங்கிலம், வேதம் இவற்றில் பண்டிதரான ஸ்ரீ ராகவ தீக்ஷிதர் (மேற்கு மாம்பலம்) மிகவும் உதவி செய்தார்கள். வரும் முயற்சிகளிளும் உதவ உறுதி அளித்துளார்கள்.
23-10-24
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சந்த்ரசேகரேந்ர சரஸ்வதி ஸ்வாமிகளால் அனுக்ரஹிக்கப்பட்டு வேத ரக்ஷண நிதி டிரஸ்டால் 1988 ல் ப்ரசுகரிக்க பட்ட க்ரந்த லிபியில் உள்ள ஸ்ரீ ஹிரண்யகேசி ஸ்ரீ சத்யாஷாட க்ருஹ்ய ஸூத்ரம், க்ருஹ்ய காரிகை, ச்ராத்த ப்ரயோகம் ஒரு பிரதி கிடைத்தது. அதை யாவரும் உபயோகிக்கும் பொருட்டு ஸ்கேன் செய்து sathyashadam.org ல் வெளியிட உத்தேசிது டிரஸ்டின் Executive Trustee ஸ்ரீ ஸ்வாமிநாதன் சந்ரசேகர் அவர்களை அனுகினோம். அவர் ஸ்ரீஸ்ரீ விஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை சந்தித்து 081024 ஸ்ரீஸ்ரீபெரியவாளின் அனுமதியை பெற்று தந்தார். அதன் பேரில் library sectional ல் வெளியிட்டு உள்ளோம் என்பதை மகிழ்சியுடனும் பணிவுடனும் தெரிவித்துகோள்கிறோம்.
இம்முயற்சியில் எனது சகோதரன் சிர. ரவீந்த்ரன் மாமாவின் புத்ரர்கள் சிர. ரமேஷ், சிர ஸ்ரீ ராம் அவர்களும் உதவினர்.